ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் கீழ், 102 தொழில் காப்பகங்களுக்கு ரூ.375.25 கோடி - அடுத்த கட்ட அதிரடியில் மத்திய அரசு!

Update: 2022-08-06 05:50 GMT

ஸ்டார்ட்அப் இந்தியா வித்துக்கள் திட்டத்தின்கீழ்,  மொத்தம் ரூ.945 கோடியில், ரூ.375.25 கோடி மதிப்பிலான 102 தொழில் காப்பகங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், 81.45 கோடி மதிப்பில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் அங்கீகரிக்கப்பட்ட 378 புத்தொழில்கள் மற்றும் தொழில் காப்பகங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றிலிருந்து இரண்டு தொழில் காப்பகங்களுக்கு, சிக்கிம் மற்றும் அசாமிலிருந்து தலா ஒன்றுக்கும் இந்த திட்டத்தின்கீழ், 5 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து, ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் 9 புதிய தொழில்கள் மற்றும் தொழில் காப்பகங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஸ்டார்ட்அப் இந்தியா வித்துக்கள் திட்டம், 1 ஏப்ரல் 2021 முதல் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களுக்கு திட்டம், மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றுக்கான நிதியுதவியை அளிக்கிறது.

இந்த தகவலை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம்நாத் பிரகாஷ், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

Input From: swarajyamag

Similar News