டெல்லியில் மீண்டும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ்!

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது எனக் கூறினார்.

Update: 2021-12-14 08:38 GMT

தென்னாப்பிக்காவில் முதன் முதலாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு 60 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் விமான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இருந்தபோதிலும் இந்தியாவிலும் இந்த வைரஸ் கால் பதித்து விட்டது.


இந்நிலையில், டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது எனக் கூறினார்.

அதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News