ஜாமீனில் வெளிவராதபடி 5 வருட சிறை.. லவ் ஜிகாத்துக்கு புதிய சட்டம்.!

ஜாமீனில் வெளிவராதபடி 5 வருட சிறை.. லவ் ஜிகாத்துக்கு புதிய சட்டம்.!

Update: 2020-11-17 15:03 GMT

வெகு விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் கூறியுள்ளார். ‘லவ் ஜிகாத்’ நடைமுறையில் இருப்பதைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வ ஏற்பாடுகளை தனது அரசு செய்யும் என்று மபி முதலமைச்சர் சிவராஜ் சவுகான் நவம்பர் 2ம் தேதி அறிவித்திருந்தார். மேலும் ‘‘காதல் பெயரில் ஜிகாத் செயல் இனி இருக்காது, அத்தகைய செயலை யார் செய்தாலும் அவர்கள் சரி செய்யப்படுவார்கள். இதற்காக சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்றும் முதல்வர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வெகு விரைவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய பிரதேச மாநில அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த மபி மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அடுத்த சட்டமன்ற தொடரில் லவ் ஜிகாத்துக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படும்.


இதற்கு 5 வருட சிறைத்தண்டனையை உள்ளடக்கிய சட்டமாக இது அமையும் என கூறியுள்ளார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டமாகவும் இது அமையும் என கூறியுள்ளார். மேலும், ஹரியானா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லவ் ஜிகாத் நடைமுறைக்கு எதிரான சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Similar News