நாக்பூர்- ஷீரடிக்கிடையே 520 கி.மீ விரைவு நெடுஞ்சாலை - கோலாகலமாக திறந்துவைத்த பிரதமர் மோடி
நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவு அடைந்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாக்பூரில் தொடங்கி வைத்தார். இது குறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில்,"சிறந்த, தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், நாக்பூருக்கும், ஷிரடிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலைத் திட்டம் அமைந்துள்ளது.இந்த நவீன நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், நெடுஞ்சாலையிலும் பயணித்தேன்.
மகாராஷ்டிராவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த சாலை அமையும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய இந்து ஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே மகாராஷ்டிரா சம்ரித்தி நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாம் கட்டம் நிறைவு அடைந்ததையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் தொடங்கி வைத்தார்.
சம்ருத்தி மகாமார்க் அல்லது நாக்பூர்-மும்பை சூப்பர் கம்யூனிகேஷன் எக்ஸ்பிரஸ்வே திட்டம், நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட இணைப்புச்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த 701 கிமீ அதிவேக நெடுஞ்சாலை, சுமார் ரூ 55,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசின் குறிக்கோளின் நிறைவேற்றும் பகுதியில் தற்பொழுது தரமான நெடுஞ்சாலைகள் மக்களுக்காக கட்டப்பட்டு வருகிறது.
Input & Image courtesy: News