மாவட்ட கவுன்சில் தேர்தல் நேரத்தில் 6 மூத்த கட்சி தலைவர்கள் இராஜினாமா - மெஹபூபா முப்திக்கு பெரும் பின்னடைவு.!
மாவட்ட கவுன்சில் தேர்தல் நேரத்தில் 6 மூத்த கட்சி தலைவர்கள் இராஜினாமா - மெஹபூபா முப்திக்கு பெரும் பின்னடைவு.!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டம் 370-ஐ மத்திய அரசு சென்ற ஆண்டு நீக்கிவிட்டது, ஒரே நாடு ஒரே தேசீய அரசு என்ற கொள்கையின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு ஒரே தேசீய கொடிதான் என்பதை உணர்த்தும் வகையில் அங்கு அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்டிருந்த ஜம்முகாஷ்மீருக்கான கொடியை இறக்கிவிட்டு தேசீயக் கொடி மட்டுமே தற்போது பறக்கவிடப்படுகிறது.
இந்த நிலையில் அங்குள்ள பிரிவினைவாத கட்சிகளும் தீவிர வாத அமைப்புகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இநிலையில், காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி சில தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் " மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி என் கொடி இதுதான் இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால்தான் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் என்று கூறினார்..எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம்.
நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே எனது போராட்டம் என்றார்.
இந்நிலையில், நாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என கூறி உள்ளார்.