மத்திய அரசு துறையில் 8.70 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு!

Update: 2022-03-17 05:20 GMT

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நேற்று நேற்று (மார்ச் 16) கேள்வி நேரத்தின்போது அரசு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்கள் பற்றிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது; மத்திய அரசு துறைகளில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணியில் உள்ளனர். மீதம் 8 லட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy: The Indian Express

Tags:    

Similar News