5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசிகள்: பணிகளை முடுக்கிவிட்ட இந்திய அரசு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

Update: 2021-05-15 06:07 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள 2வது அலையில் பல லட்சம் மக்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில் சில ஆயிரம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே தடுப்பூசி குறித்து நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் கூறும்போது: இந்திய மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயார் நிலையில் இருக்கும். அனைத்து வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்ற தகவலை தற்போது கூறியுள்ளார்.



இந்நிலையில், 216 கோடி தடுப்பூசிகளில் எந்தெந்த தடுப்பூசிகள் எவ்வளவு கிடைக்கும், அதனை யார் தயாரித்து வழங்குவார்கள் என்பன குறித்து பார்ப்போம்.



கோவிஷீல்டு - 75 கோடி, கோவேக்சின்- 55 கோடி, பயாலஜிக்கல் இ- 30 கோடி, ஜைடஸ் கேடிலா டி.என்.ஏ- 5 கோடி, நோவாவேக்ஸ் - 20 கோடி, பி.பி.மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி- 10 கோடி, ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. 6 கோடி, ஸ்புட்னிக்-வி 15.6 கோடி ஆக மொத்தம் 216.6 கோடி தடுப்பூசிகள் ஆகும். இந்த அனைத்து தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.


மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து குடிமக்களையும் காப்பாற்றி வருகிறது. எனவே மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு முறைகளை முறையாக பின்பற்றினால் கொரோனா தொற்று நம்மை விட்டு சென்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Similar News