எரிசக்தித் துறையில் தற்சார்பை நோக்கி இந்தியா - அதிரவைக்கும் சாதனை.!

எரிசக்தித் துறையில் தற்சார்பை நோக்கி இந்தியா - அதிரவைக்கும் சாதனை.!

Update: 2020-11-18 07:00 GMT

சந்தைக்கு நட்பான கொள்கையான திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை (Open Acreage Licensing Policy - OALP) எரிசக்தித் துறையில் தற்சார்பை உருவாக்கிக் கொண்டிருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் ஐந்தாம் சுற்றின் கீழ் வழங்கப்பட்ட 11 எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொகுதிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (HELP) அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் நடைபெற்ற, திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் மூலம், ஆய்வு செய்யப்படும் நிலப்பரப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

முந்தைய ஆட்சிகளின் போது 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக இருந்த ஆய்வு செய்யப்படும் நிலப்பரப்பின் அளவு, திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை ஏலத்தின் ஐந்தாம் சுற்றின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் காரணமாக 2,37,000 சதுர கிலோ மீட்டராக தற்போது அதிகரித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மொத்தம் 19,789.04 சதுர கி.மீ பரப்பளவில் 8 வண்டல் படுகைகளில் மொத்தம் 11 தொகுதிகள் OALP பிட் சுற்று 5 இன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 465 கோடி உடனடி ஆய்வு பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News