கிறிஸ்தவ மத மாற்றத்துக்குக் குறி.? லவ் ஜிகாத் சட்டத்துக்கு பின் பா.ஜ.க செய்யப்போவது என்ன.?

கிறிஸ்தவ மத மாற்றத்துக்குக் குறி.? லவ் ஜிகாத் சட்டத்துக்கு பின் பா.ஜ.க செய்யப்போவது என்ன.?

Update: 2020-11-30 13:04 GMT

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரப் பிரதேச பா.ஜ.க அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வந்து அதன் கீழ் வழக்குகளையும் பதிவு செய்யத் தொடங்கி விட்ட நிலையில், மற்றொரு பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசம் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ‘லவ் ஜிஹாத்’ குற்றங்களை தடுப்பதற்காக மத சுதந்திர மசோதா 2020ஐ தாக்கல் செய்ய உள்ளது.

இது முஸ்லீம் ஆண்கள் இந்து பெண்களை திருமணம் என்ற பெயரில் மதம் மாற்றுவதை குற்றமாக கருதி தண்டனை வழங்க உதவும். இந்த மசோதாவை தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலத் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் சமூக சேவை செய்கிறோம் என்ற போர்வையில் மத மாற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்து மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கிறிஸ்தவத்துக்கு மத மாற்றம் செய்யப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் இதற்கு தீர்வு‌காண பல ஆண்டுகளாக அரசுகள் போராடி வருகின்றன. 1968ஆம் ஆண்டில் திருமணம் உட்பட எந்தவொரு நோக்கத்திற்காகவும் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்கும் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் மத்தியப் பிரதேசம். 

இது முக்கியமாக இந்து மதத்திலிருந்து கட்டாயப்படுத்தி கிறிஸ்தவத்திற்கு மாற்றுபவர்களை கைது செய்யும் நோக்கத்தை கொண்டது. எனினும் இந்த சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்பதால் பிசுபிசுத்துப் போனது. கடந்த நான்கு நாட்களில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் உமரியா மற்றும் பத்வானி மாவட்டங்களில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் உரையாற்றிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கிறிஸ்தவர்கள் வலுக்கட்டாயமாக பழங்குடியினரை மதம் மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

பத்வானியில் வெள்ளிக்கிழமை ஒரு மத்தியில் உரையாற்றிய முதல்வர், 19ஆம் நூற்றாண்டின் பழங்குடி சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா, பெரிய அளவிலான மத மாற்றங்களில் ஈடுபட முயன்ற கிறிஸ்தவ மிஷனரிகளை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பதை நினைவு கூர்ந்தார்.

மேலும் இது போன்ற கிறிஸ்தவ மிஷினரிகள் சேவை ஆற்றலாம், ஆனால் அதை வைத்து மக்களை மதம்‌மாற்றும் நோக்கில் அல்ல என்று முதல்வர் சவுகான் எச்சரித்தார். கட்டாயப்படுத்தியோ அல்லது பணம், பிற உதவிகள் மூலமாதவோ மதம் மாற்றுவதற்கான எந்த முயற்சியும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவ்வாறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். 

எனவே லவ் ஜிகாத்துக்கு அடுத்து இந்து சமூகத்துக்கும் இந்திய தேசத்துக்கும் பெரிய தலைவலியாக இருந்து வரும் கிறிஸ்தவ மத மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் பா.ஜ.க அரசுகள் சட்டம் இயற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது, அண்டை நாடுகளில் வசிக்கும் இந்து அகதிகளுக்கு மறு வாழ்வு அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் பா.ஜ.க அரசு காட்டிய ஆர்வம் இந்த விஷயத்திலும் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Similar News