இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர்களில் ஒருவராக திகழும் கவுதம் அதானிக்கு இன்று (ஜனவரி 24) 60வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதற்கு முன்வந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நன்கொடையை சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்படும். அதானி அறக்கட்டளை மூலமாக இப்பணிகள் நிர்வகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் பிறந்தநாளை நூற்றாண்டு மற்றும் கவுதம் அதானியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் ரூ.60 ஆயிரம் கோடியை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்குவது இதுவே முதன் முறையாகும்.
Source: Maalaimalar
Image Courtesy: Business Standard