போதை பொருள் விவகாரம்: ஆப்கன், பாகிஸ்தான் சரக்குகளை கையாள அதானி துறைமுகம் மறுப்பு!
நவம்பர் 15 முதல் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது என்று அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.
நவம்பர் 15 முதல் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் சரக்கு பெட்டகங்களை கையாள முடியாது என்று அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மாதம், குஜராத், முந்த்ரா துறைமுகத்திற்கு வந்திறங்கிய சரக்கு பெட்டகங்களில் இருந்து 3000 கிலோ ஹெராயின் போதை பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதாவது பெரிய பிளாஸ்டிக் பைகளில் முகத்திற்கு பூசுகின்ற பவுடன் என்று குறிப்பிட்டு அதில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் அதிரடியான சோதனை நடத்தப்பட்டு, ஆப்கான், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே குஜராத் முந்த்ரா துறைமுகத்தை அதானி துறைமுக நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இதன் காரணமாக போதைப் பொருள் பறிமுதல் சம்பவத்தை தொடர்ந்து அதானி துறைமுக நிறுவனம் முந்த்ரா துறைமுகம் உட்பட பல துறைமுகங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் நவம்பர் 15 முதல் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களை கையாளப் போவதில்லை என்று அதானி துறைமுக நிறுவனம் அறிவித்துள்ளது.
Source, Image Courtesy: Dinamalar