ஊழல் செய்பவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது: இந்திய அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உரை!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சபை கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக்கொண்டது. அதன்படி ஜனவரி 26ம் தேதி 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து இந்திய அரசிலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26ம் தேதி இந்திய அரசிலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2021-11-26 07:08 GMT

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, இந்திய அரசியலமைப்பு சபை கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக்கொண்டது. அதன்படி ஜனவரி 26ம் தேதி 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து இந்திய அரசிலமைப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 26ம் தேதி இந்திய அரசிலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா பாராளுமன்றத்தில் உள்ள மைய அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது: அரசியலமைப்பு நாள் என்பது நமது நாட்டு தலைவர்களை நினைவு கூறுகின்ற நாள் ஆகும். மகாத்மா காந்தி மற்றும் நாட்டுக்காக போராடிய அனைவரையும் இன்று நினைவுகூற வேண்டும்.

மேலும், வேற்றுமை கொண்ட இந்திய நாட்டை அரசியலமைப்பு சட்டம்தான் ஒருங்கிணைக்கிறது என்றார். ஊழலுக்காக தண்டனை பெறுபவர்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதே போன்று கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருக்கக் கூடாது. ஒரு கட்சியை ஒரு குடும்பம் மட்டும் வழி நடத்துவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. இவ்வாறு பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter


Tags:    

Similar News