இந்தியா திரும்பியதற்கு உதவி செய்த பிரதமர் மோடிக்கு ஆப்கான் சீக்கிய எம்.பி., கண்ணீருடன் நன்றி!

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். அவரை போன்று மற்ற பொதுமக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர்.

Update: 2021-08-22 08:09 GMT

காபூலில் இருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி., எல்லாம் போச்சி என்று கண்ணீருடன் கூறினார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். அவரை போன்று மற்ற பொதுமக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். 

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி., நரேந்தர் சிங் கல்சா, காபூலில் இருந்து இந்திய விமானப் படையால் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே இந்தியா வந்த பின்னர் நரேந்திர சிங் கல்சா பேசியதாவது: ஆப்கானில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட அனைத்தும் தற்போது முடிந்து விட்டன. தற்போது எல்லாம் பூஜ்ஜியமாக உள்ளது எனக் கூறினார்.

மேலும், நாடு திரும்ப உதவிய பிரதமர் மோடி, இந்திய அரசு மற்றும் விமானப்படைக்கும் தனது சமூகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Ani

https://www.puthiyathalaimurai.com/newsview/113590/Afghan-Sikh-MP-breaks-down-on-reaching-India-from-Kabul--says--Everything-is-finished-

Tags:    

Similar News