மாடர்னா கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி.!
இந்த தடுப்பூசி வரத்தால் மேலும் அதிகளவு பேருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதுதான். இதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரொனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். இந்தியாவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி வரத்தால் மேலும் அதிகளவு பேருக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.