அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் வழக்கு: என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்.!

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

Update: 2021-03-08 12:21 GMT

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகர் பகுதியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீடு உள்ளது. உலகிலேயே மிகவும் சொகுசான பங்களாவாக அவரது வீடு திகழ்ந்து வருகிறது. 24 மணி நேரமும் மும்பை போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் அவரது வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.


 



கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகேஷ் அம்பானி வீடு அருகே ஒரு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காரை போலீசார் ஆய்வு செய்தனர் அதில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து காரில் இருந்து வெடிபொருட்கள் அனைத்தும் செயல் இழக்க செய்யப்பட்டது. காரின் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், மன்சுக் ஹிரன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தானேவின் கல்வா சிற்றோடையில் இருந்து ஹிரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஹிரன் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என கூறப்பட்டது. அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை போலீசாருக்கு எழுப்பியது. ஹிரனின் கால்கள் கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி அவரது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை இது கொலையாக கூட இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




 


இந்நிலையில், முகேஷ் அம்பானியின் பல மாடி குடியிருப்பு ஆன்டிலியா உலகின் மிக மதிப்புமிக்க தனியார் குடியிருப்பு சொத்துக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் அம்பானியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ., விசாரணையில் வெடிகுண்டு ஏன் நிரப்பப்பட்டு அம்பானி வீடு அருகே கொண்டு வரப்பட்டது என்பன பல்வேறு சந்தேகங்களுக்கு விரைவில் விடை தெரியவரும் என்று மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News