விரைவில் பிற மொழிகளிலும் மருத்துவ படிப்பு - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அமித்ஷா

'இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கியது போல விரைவில் பிற மொழிகளிலும் மருத்துவ படிப்பு தொடங்கப்படும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2022-10-17 10:12 GMT

'இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கியது போல விரைவில் பிற மொழிகளிலும் மருத்துவ படிப்பு தொடங்கப்படும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் போபாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு இந்தியில் மருத்துவ படிப்புக்கு தயாரான புத்தகங்களை வெளியிட்டார்.

அப்போது பேசிய, 'அவர் ஹிந்தியில் மருத்துவ படிப்பை தொடங்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மாறி உள்ளது, இந்த நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்படும்' என்றார். இனி கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்த ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்காது அவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்கலாம் என கூறினார். மேலும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் பெற மொழிகளிலும் அது தொடங்கப்படும்' எனவும் தெரிவித்தார்.


Source - Maalai Malar News

Similar News