தீவிரவாதம் குறித்து இன்டர்போல் நிறைவுநாள் கூட்டத்தில் அமித்ஷா ஆற்றிய கம்பீர உரை
தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் தான் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதற்கு சரியான முறைதான் என்ற இன்டர்போல் எனவும் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இன்டர்போல் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, 'தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.