ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி.!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நான் தனிமையில் இருந்து கொண்டே எனது பணியை தொடருவேன் என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.