டில்லி CAA போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு : மெல்ல கிழியும் இந்திய போராளிகளின் முகத்திரை.!

Delhi riots accused Jamia 'student' found welcoming Taliban rule in viral audio clip on Twitter space

Update: 2021-08-17 02:30 GMT

Asif Iqbal Tabha (Photo Credits: Outlook India)

டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவரான ஆசிப் இக்பால் தன்ஹா ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை வெளிப்படையாக பாராட்டியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று சக இஸ்லாமியர்களுடனான உரையாடலின் போது, "நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைத் சொல்லப்போகிறேன். அஷ்ரப் கனி ராஜினாமா செய்துள்ளார். அல்லாஹ்வுக்கு நன்றி! இது படிப்படியாக, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் (தலிபான்களால் நிர்வகிக்கப்படுகிறது) அமைய வழிவகுக்கும் என்று பேசியுள்ளார்.

தன்ஹா, சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் போது, இந்தியாவை இஸ்லாமிய குடியரசாக மாற்ற விரும்புவதாக கருத்து தெரிவித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு முதல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா அமைப்பின் (SIO) உறுப்பினராக பதவி வகிக்கும் தன்ஹா, டெல்லி  கலவரத்தின் பின்னணியில் பெரிய சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டுக்காக, கடந்த ஆண்டு மே மாதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) முஸ்லீம்களுக்கு எதிரானதாகக் கருதினார், எனவே ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்களுடன் சேர்ந்து அதை எதிர்த்தார். 'அமைதியான போராட்டங்கள்' என்ற போர்வையில் பேருந்துகளுக்கு தீ வைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

கொல்கத்தா, கோட்டா, லக்னோ, கான்பூர், உஜ்ஜைன், இந்தூர், ஜெய்ப்பூர், பாட்னா, சப்ஸிபாக், ஆராரியா, சமஸ்திபூர், அகமதாபாத் உட்பட நாட்டின் பல இடங்களில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதை ஆசிப் இக்பால் ஒப்புக்கொண்டார். இந்தியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், அத்தகைய தேவை ஏற்பட்டால் வன்முறையில் ஈடுபடலாம் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். 

Tags:    

Similar News