1000 அனுமதி பெறாத மதரஸாக்கள் - மாநில அமைதிக்கு பங்கம் என்பதால் அதிரடி முடிவெடுக்க அரசு முடிவு!

Update: 2022-08-05 01:56 GMT

அசாமில் தற்போது இயங்கி வரும் சுமார் 1,000 தனியார் மதரஸாக்களை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான மாநில அரசு ஒழுங்குபடுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. அல்-கொய்தா மற்றும் வங்காளதேசத்தை தளமாகக் கொண்ட அன்சருல்லா குழு உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய 11 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். 

இந்த வலைப்பின்னலின் மூளையாக செயல்பட்ட முஸ்தாபா என்கிற முஃப்தி முஸ்தபா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . அவர் மோரிகானின் சஹாரியா காவ்ன் கிராமத்தில் உள்ள சாருச்சலா அல்-ஜமியத்துஸ் சாலிஹாத் மதரசாவில் ஆசிரியராக இருந்தார்.

இந்தியா டுடே அறிக்கையின்படி, அஸ்ஸாமில் குறைந்தபட்சம் 1,000 தனியார் மதரஸாக்கள் இயங்குகின்றன, 2016 இல் 788 இல் இருந்து, 100ஆக அதிகரித்துள்ளது. இந்த மதரஸாக்கள் தொடர்பான அரசு பதிவுகள் சரியாக இல்லை. அரசு உதவி பெறும் மதரஸாக்களை வழக்கமான பள்ளிகளாக மாற்ற மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

அசாமின் கல்வி அமைச்சர் ரனோஜ் பெகு கூறுகையில், "தனியார் மதரஸாக்களில் சில விதிகளை அமல்படுத்த முடியுமா என்றும், அங்கு நவீன கல்வியை வழங்க வழிவகை செய்ய முடியுமா என்றும் நாங்கள் அறிக்கைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். சட்ட ஆலோசனையை எடுத்து வருகிறோம். இந்த தனியார் மதரஸாக்களை நடத்தும் எந்த வாரியமும் எனக்கு தெரியாது.

இந்த மதரஸாக்கள் குறித்து எங்களிடம் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை. அஸ்ஸாம் காவல்துறையின் தலைமை இயக்குநர் பாஸ்கர் ஜோதி மஹந்தா, காவல்துறை இந்த மதரஸாக்களில் ஆய்வு நடத்தியதாகவும், முழுத் தகவல்களும் இருப்பதாகவும் உறுதிபடக் கூறினார். 

Input From: Opindia 

Similar News