ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக முடக்கப்படும் தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்கள் - சாட்டையை சுழற்றும் புலனாய்வு அமைப்பு
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்கள் அதிரடியாக முடக்கப்பட்டு வருகின்றன.;
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களின் சொத்துக்கள் அதிரடியாக முடக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் 90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மாநில புலனாய்வு அமைப்பு பறிமுதல் செய்தது. ஜமாத் இஸ்லாமி இயக்கத்தின் நிதி ஆதாரங்களை முடக்கும் வகையில் நேற்று அனைத்து மாவட்டத்தின் 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜம்மு காஷ்மீரில் ஜமாத்திற்கு சொந்தமான 200 இடங்களை கண்டறிந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.