ஏ.டி.எம்.மில் ரூ.64 லட்சம் கொள்ளை வழக்கில் 2 பேர் அரியானாவில் கைது.!

தமிழகத்தில் பல்வேறு எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் வடமாநில கொள்ளையர்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-23 07:25 GMT

தமிழகத்தில் பல்வேறு எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் வடமாநில கொள்ளையர்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்ளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு வடமாநிலங்களில் தேடுதல் வேட்டையில் போலீஸ் ஈடுபட்டது.

இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அரியானாவில் 2 பேர் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் டெல்லியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிடிப்பட்ட அனைவரும் அரியானாவில் ஒரே இடத்தில் வைத்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ரூ.64 லட்சம் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Similar News