ஜும்மா மசூதியில் பெண்கள் நுழைய தடை: சபரிமலைக்கு பொங்கிய கூட்டம் எங்கே? இணையவாசிகள் விமர்சனம்!

Update: 2022-11-25 04:55 GMT

டெல்லியில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஜும்மா மசூதி உள்ளது. இதன் 3 முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சில நாட்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டது.

பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக  கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு நம்மை 100 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண்கள் தனியாக வந்து தங்கள் ஆண் நண்பர்களுக்காக காத்திருக்கிறார்கள். அதனால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என ஜும்மா மசூதியின் ஷாகி இமாம் சையது அகமது புகாரி கூறினார். 

இந்த விவகாரம் குறித்து ஜும்மா மசூதி ஷாகி இமாம் உடன் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பேசினார். இதையடுத்து மசூதிக்குள் பெண்களுக்கு தடை விதிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற இமாம் ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மரபு படி பெண்கள் நுழையக்கூடாது என்றதற்கு போராடிய கூட்டம், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? என இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

Input From: HinduTamil

Similar News