பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை 5 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் நீட்டிக்கப்படும் - கர்நாடகத்தில் கர்ஜித்த அமித்ஷா

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை ஆதரித்ததாக காங்கிரஸ் கட்சியின் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சுமத்தியுள்ளார்.;

Update: 2022-12-31 07:57 GMT

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை ஆதரித்ததாக காங்கிரஸ் கட்சியின் மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சுமத்தியுள்ளார்.

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு தலைமையிலான அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான 1800 வழக்குகளை ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சுமத்தியுள்ளார். மாண்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சித்ராமையா தலைமையிலான அரசு ஆதரவு அளித்ததாக' விமர்சித்தார்.

அப்படி மன்னித்து விடப்பட்ட சிலரால்தான் பிரவீன் நட்டாறு கொலை போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு அந்த இயக்கத்தை பா.ஜ.க அரசு தடை செய்திருப்பதாகவும் இந்த தடை நீடிக்கப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.



Source - Polimer News

Similar News