லாக்டவுனில் பெங்களூரு நகரம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.!
கடந்த 2 நாட்களாக நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படும் நிலையே தொடர்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவத் தொடங்கி விட்டது. இதனை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்தார். அதன்படி கடந்த 2 நாட்களாக நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படும் நிலையே தொடர்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே காலையில் ஒரு சில மக்கள் வெளியே வருகின்றனர்.
மற்றபடி அனைவரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் முழு நகரத்தையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. அதே போன்று லால்பாக் சாலை, கப்பன்பார்க் சாலை, மற்றும் எலக்ட்ரானிக்சிட்டி சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன போக்குவரத்து என்பது ஒரு சிலவற்றை தவிர மற்றவை பார்ப்பது கடினம் என்றே சொல்லாம்.
ஊடகம், செய்தி நிறுவனங்களை சார்ந்தவர்கள் மட்டும் சாலையில் சென்று வருகின்றனர். அதிலும் கடைகளுக்கு வெளியே ஆதரவின்றி இருக்கும் ஒரு சிலரும் படுத்திருப்பதை காண முடிகிறது.
சரக்கு போக்குவரத்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.