போராட்ட களமா.. இல்லை சுற்றுலா தளமா.. பீசா சாப்பிடும் ஏழை விவசாயிகள்..!

போராட்ட களமா.. இல்லை சுற்றுலா தளமா.. பீசா சாப்பிடும் ஏழை விவசாயிகள்..!

Update: 2020-12-15 11:27 GMT

வேளாண் சட்டத்திற்கு எதிராக அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் விவசாயிகள் டெல்லியில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு வந்தவர்கள் போன்று தெரியவில்லை ஏதோ சுற்றுலாவுக்கு சென்றவர்கள் போன்று சகல வசதிகளுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

போலி விவசாயிகளின் முகத்திரை ஒவ்வொன்றாக வெளியில் வருகிறது. துணி துவைப்பதற்கு வாஷிங்மெஷின், தூங்குவதற்கு தலையணை, மெத்தை மற்றும் சாப்பிடுவதற்கு நட்சத்திர ஓட்டலில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பீசாவுடன் தங்களது நாட்களை கடத்தி வருகின்றனர். 500 முதல் 700 ரூபாய் வரை கொடுத்து பீசா வாங்கி சாப்பிடுபவர்கள் ஏன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்க்கிறார்கள் தெரியவில்லை.

ஏழை விவசாயிகளின் நலன் கருதியே வேளாண் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து புதிய சட்டமாக வடிவமைத்தது. இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும். இதனை அறிந்து கொண்ட ஏஜெண்டுகள் விவசாயிகளை தூண்டிவிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் விவசாயிகள் புரிந்து கொண்டு தங்களின் ஊர்களுக்கு செல்வார்கள் என பாஜக மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Similar News