பீகார்: கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் தலைமைச் செயலர்.!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பீகார் மாநில தலைமைச் செயலர் அருண்குமார் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அரசு உயர் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-30 11:02 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பீகார் மாநில தலைமைச் செயலர் அருண்குமார் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அரசு உயர் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீகார் மாநில தலைமைச் செயலர் அருண்குமார் சிங், கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு ஒட்டுமொத்த அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன் முறையாக தலைமைச் செயலர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News