ஐஎஸ்ஐ முத்திரை இல்லை என்றால் இனி மக்கள் பக்கமே போகக்கூடாது - தரமில்லாத பொருட்கள் தயாரிப்புக்கு சூடு போட்ட மத்திய அரசு!

Update: 2022-08-05 01:47 GMT

நுகர்வோருக்குத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தரமாக கிடைப்பதற்கு இந்திய தர நிர்ணய அமைப்பு, உறுதிபூண்டுள்ளது. அரசால் வழங்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை அது முழு வீச்சில் செயல்படுத்துகின்றது, தயாரிப்புகள் தொடர்புடைய இந்திய தரநியமங்களின் தேவைகளுக்கு இணங்குவதை இது உறுதி செய்கிறது.

தரக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு, பிஐஎஸ் மூலம் உரிமம் பெறப்பட்ட செல்லுபடியாகும் சான்றிதழ் தவிர, வேறு எந்த நபரும் தரக்கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள எந்தப் பொருளையும் தர முத்திரையின்றி உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ, விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ, சேமிக்கவோ அல்லது விற்பனைக்குக் காட்சிப்படுத்தவோ முடியாது.

இந்த ஆணைகள் இந்திய உற்பத்தியாளர்களுக்கும், வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்பதால், இந்திய நுகர்வோர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து உறுதியளிக்கப்படுகிறார்கள்.

பொது நலன், மனித/விலங்கு அல்லது தாவர பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பது மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் இந்திய தரநிலைகளைப் பின்பற்றி பிஐஎஸ் தரச் சான்றிதழைப் பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்குகிறது.

இன்றுவரை 450 க்கும் மேற்பட்ட பொருட்கள் கட்டாய சான்றிதழின் கீழ் உள்ளன. உத்தரவின் விதிகளை மீறும் எந்தவொரு நபரும், பிஐஎஸ் சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. 

Input from: myind


Similar News