ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் தட்டி தூக்கிய பா.ஜ.க - அதிக இடங்களை வென்று சாதனை
ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.;
ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இப்பொழுது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இதற்கிடையில் ஹரியானாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களில் வென்றுள்ளது, ஹரியானாவில் 143 பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் 143 இடங்களில் 58 இடங்களில் பா.ஜ.க வென்றுள்ளது. மேலும் மீதமுள்ள இடங்களுக்கான முடிவுகள் நேற்று இரவு வரை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் இன்னும் அதிகமாக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் என தெரிகிறது. இதன் இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.