மூத்த தலைவர்களுக்கு பாதபூஜை செய்த பா.ஜ.க தலைவர் - ஏன் தெரியுமா?

பா.ஜ.க மூத்த தொண்டர்களுக்கு பாத பூஜை செய்துள்ளார் அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ ஷர்மா.

Update: 2022-10-09 09:20 GMT

பா.ஜ.க மூத்த தொண்டர்களுக்கு பாத பூஜை செய்துள்ளார் அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வ ஷர்மா.

கௌஹாத்தியில் பா.ஜ.க மாநில அலுவலகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வகர்மா பா.ஜ.க மூத்த தொண்டர்களின் பாதத்தை சுத்தம் செய்து மரியாதை செய்தார்.

முதல்வர் மூத்த தலைவர்களுக்கு பாதபூஜை செய்தது அசாம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பாதபூஜை செய்தவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டுக்கு முன்பே பா.ஜ.க'வில் சேர்ந்த மூத்த தொண்டர்கள் ஆவார்கள். மொத்தம் 75 பேருக்கு அவர் பாத பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - Polimer News 

Similar News