L K அத்வானியின் 93வது பிறந்தநாளுக்கு பா.ஜ.க தலைவர்கள் வாழ்த்து.!

L K அத்வானியின் 93வது பிறந்தநாளுக்கு பா.ஜ.க தலைவர்கள் வாழ்த்து.!

Update: 2020-11-08 17:41 GMT
நவம்பர் 8 (இன்று) ஞாற்றுக்கிழமை பா.ஜ.கவின் மூத்த தலைவர் L K அத்வானியின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ.க மூத்த தலைவர்கள் அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். 

பிரதமர் மோடி அத்வானியிடம் ஆசி பெற்று அவரது கேக் வெட்டும் விழாவிலும் கலந்து கொண்டார். பா.ஜ.க தலைவர் J P நட்டா மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் BL சந்தோஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

முன்னர், அத்வானியின் கட்சிக்கான அர்ப்பணிப்புகளைப் பாராட்டி மற்றும் அவரது உடல் நலத்திற்காகவும் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வதாக பா.ஜ.க தலைவர் J P நட்டா டிவிட்டில் தெரிவித்திருந்தார். 

கட்சியின் மூத்த தலைவரைப் பாராட்டி, அவரது கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற சேவையும் தந்து அத்வானி நாட்டின் முன்னேற்றத்துக்கு மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, கட்சியின் தேசியவாத எண்ணங்களை விரிவுபடுத்தவும் முக்கிய பங்கு ஆற்றிவருகிறார் என்று அமித்ஷா டிவிட்டில் தெரிவித்தார். 

கட்சியின் மூத்த தலைவரும் மற்றும் நாட்டில் மரியாதைக்குரிய அரசியல்வாதிகளும் ஒருவர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "அவரின் பங்கு நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் மற்றும் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் கடவுள் தருவார்," என்று சிங் கூறியிருந்தார். 

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் சுனில் குமார் மோடி ஆகிவரும் அவர்களது வாழ்த்துக்களை L K அத்வானிக்குத் தெரிவித்தனர். "எங்கள் வழிகாட்டி மற்றும் சிறந்த தேசியவாத தலைவரும் மற்றும் முன்னாள் துணைப் பிரதமருமான L K அத்வானிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கு பிரார்த்தனை செய்கிறேன்," என்று சுனில் குமார் மோடி ட்விட்டில் குறிப்பிட்டார். 

"கட்சியின் மூத்த தலைவர் L K அத்வானிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்க  எனது வாழ்த்துக்கள்,"  என்று நிதிஷ்குமார் குறிப்பிட்டார். 

Similar News