கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க கோரி பாஜக எம்.எல்.ஏ. போராட்டம்.
ஜார்கண்ட் மாநிலம், தியோகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் வருவர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அங்குள்ள சிறு, குறு வியாபாரிகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ நாராயண் தாஸ் கையில் உடுக்கையுடன் கோஷம் எழுப்பினார். இந்த போராட்டத்தால் சட்டபேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.