அரியானா மாநிலம்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க. வெற்றி.!
அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. 32 எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தனர். 55 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
சிர்சா கோபால் காந்தாவைச் சேர்ந்த அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ., பாஜக - ஜேஜேபி கூட்டணியை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.