ஆயுதங்களுடன் மிதந்த மர்ம படகு - வெடிகுண்டுகள், துப்பாக்கி மீட்பு : தீவிரவாதிகளின் பகீர் திட்டம்!

Update: 2022-08-19 06:19 GMT

ராய்காட் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது. 

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் ராய்காட் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் பகுதியை நேற்று மர்ம படகு நெருங்கியது. இந்த படகு குறித்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து படகை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பெட்டியில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராய்காட் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் பெயர் லேடி ஹான் மற்றும் இது ஆஸ்திரேலியப் பெண்ணான ஹனா லார்டர்கன் என்பவருக்குச் சொந்தமானது.

அந்த பெண்ணின் கணவர் ஜேம்ஸ் ஹோபர்ட் மஸ்கட்டில் இருந்து ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பலின் கேப்டன் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

. இதனால் மத்திய அரசு உஷார்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Similar News