ஆப்கானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு முன்னுரிமை: மத்திய அரசு தகவல் !

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு முன்னுரிமை தரப்படும் என்று மத்திய அரசு தகவல்.

Update: 2021-08-26 13:19 GMT

தற்போது தலிபான்கள் பிடியில் சிக்கியிருக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்பதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்பொழுது நிலையற்ற சூழல் ஆப்கனில் நிலவுவதால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் ஒரு சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள். 


இதற்கிடையே ஆப்கனில் சிக்கியிருக்கும் பல்வேறு நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் வெளிேயற்றி வருகின்றனர். ஆப்கனில் தங்கியுள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், இந்துக்களையும் அங்கிருந்த மத்திய அரசு பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது. கடைசியாக 160க்கு மேற்பட்ட இந்தியர்களை விமானப்படை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆப்கனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது, அங்குள்ள இந்தியர்கள் நிலை ஆகியவை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. 


இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்துப் பணிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆப்கனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்குதான் முன்னுரிமை வழங்கப்படும். இதுவரை ஆப்கனிலிருந்து இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 175 பேர், 263 இந்தியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய ஆப்கன் நாட்டைச் சேர்ந்த 112 பேர் என 565 பேர்களை இதுவரை ஆப்கனிலிருந்து இந்திய விமான படையால் மீட்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார். 

Input:https://www.oneindia.com/amphtml/india/afghanistan-crisis-centre-to-brief-political-parties-on-situation-3303471.html

Image courtesy:oneindia


Tags:    

Similar News