1 பாட்டில் வாங்கினால் 2 மது பாட்டில் இலவசம் - அலைமோதிய மது பிரியர்கள் எங்கு தெரியுமா?
ஒன்று வாங்கினால் இரண்டு மதுபான பாட்டில்கள் இலவசம் என அறிவித்திருந்த காரணத்தால் டெல்லியில் கூட்டம் அலைமோதியது.
ஒன்று வாங்கினால் இரண்டு மதுபான பாட்டில்கள் இலவசம் என அறிவித்திருந்த காரணத்தால் டெல்லியில் கூட்டம் அலைமோதியது.
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன, இந்த நிலையில் மதுபான விற்பனை கடைகளுக்கான லைசென்ஸ் பெற புதிய நடைமுறை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது, இதனால் இன்று முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
இதன் காரணமாக தங்களிடம் இருக்கும் மது பாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் கடைகள் திட்டமிட்டு ஒரு சரக்கு பாட்டில் வாங்குபவர்களுக்கு இரண்டு பாட்டில் மது இலவசம் என்று அறிவிப்பு அதிரடியாக வெளியிட்டது.
இதனால் மது பிரியர்கள் அளவுக்கு அதிகமான பாட்டில்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர், ஒரு மது பாட்டில் வாங்கியதால் இரண்டு பாட்டில் கிடைத்ததால் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கடையை முற்றுகையிட அரமித்தனர். இந்த அறிவிப்பால் டெல்லி நகர வீதிகளில் உள்ள மதுபான கடைகள் நேற்று மாலை முழுவதும் திருவிழா கூட்டம் போல் காட்சி அளித்தது.