சீனாவுக்காக தன்மக்கள் நலனையும் மறந்த கனடா பிரதமர் ட்ரூடோ: இரகசிய கடிதம் அம்பலமானதால் மக்கள் குமுறல் !
சீனாவுக்காக தன்மக்கள் நலனையும் மறந்த கனடா பிரதமர் ட்ரூடோ: இரகசிய கடிதம் அம்பலமானதால் மக்கள் குமுறல் !
கனடா பிரதமர் ட்ரூடோவின் சமீபத்திய பல பன்னாட்டு கொள்கைகள் ஆபத்தானவையாக உள்ளன, குறிப்பாக சமீபத்தில் வெளியான ஒரு ரகசிய ஆவணம் மூலம் சீனாவுடனான அவரின் உறவுகள், அவர்களின் ஆபத்தான கொள்கைகள் பற்றிய இரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணம் ஓன்று வெளிப்பட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் அமெரிக்க எதிர்ப்பை மீறியும், சொந்த நாட்டு படை தலைவர்களின் எதிர்ப்பையும் மீறியும் , தங்கள் நாட்டு அப்பாவி பிரஜைகளை பிணைக் கைதிகளாக கடத்தி சீனா சிறையில் வைத்த பிறகும் ‘குளிர்-வானிலை போரில்’ பயிற்சி பெற கனடா சீன இராணுவத்தை எவ்வாறு அழைத்தது என்பதை இரகசிய ஆவணம் ஓன்று அம்பலபப்டுத்தியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது கனடாவில் மட்டுமல்லாமல் அகில உலக அளவிலும் ட்ரூடோவின் மீது கறைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 34 பக்க ரகசிய ஆவணம் ரெபெல் நியூஸ் நெட்வொர்க் என்கிற ஊடகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது, இது கனடா மீதான உண்மைகளையும், சீனா மீதான அதன் ஆபத்தான கொள்கையையும் வெளிச்சம்போட்டு காண்பிக்கிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி கனடா சீனாவின் இராணுவத்தை குளிர் காலநிலை போர் பயிற்சிக்கு அழைத்ததாக அது வெளிப்படுத்துகிறது.
டொராண்டோவில் உள்ள கனேடியப் படைக் கல்லூரியில், மற்றும் கிங்ஸ்டனில் உள்ள பிற இராணுவ வசதிகளிலும், கனடா சீன ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வந்ததை அவர்கள் பெற்ற தகவல்கள் உறுதிப்படுத்தின. கனடியர்கள் இந்த நிறுவனங்களில் ‘குளிர் காலநிலை இராணுவ தந்திரங்களுக்கு’ பயிற்சி அளித்து வந்தனர்.
அப்போதுதான் கனடிய குடிமக்கள் மைக்கேல் ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோரை அமெரிக்காவை பழி வாங்க எண்ணி சீன ராணுவம் பணய கைதிகளாக சென்ற ஆண்டு கடத்தியது. இதனால் கனடா இராணுவம் பயிற்சியை ரத்து செய்தது. இதனால் கனடிய ஆயுதப்படைகள்மீது சீனா கோபமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும் சீனா 2 கனேடிய குடிமக்களைக் கடத்திச் சென்ற சில நாட்களிலும் இந்த பயிற்சி ட்ரூடோவின் முயற்சியால் மேலும் நடக்கவிருந்தது என்பதுதான் மிகவும் கடுமையாக பார்க்கப்படுகிறது.