இனி நோ சான்ஸ்! 3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓ-க்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து!
2019 மற்றும் 2021 க்கு இடையில் 1,811 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு, சட்டத்தை மீறியதாகக் கூறி, அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.
சட்டத்தின்படி, வெளிநாட்டு நிதியைப் பெற விரும்பும் எந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் FCRA இன் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2019 மற்றும் 2021 க்கு இடையில், FCRA, 2010 இன் விதிகளை மீறியதால், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் பிரிவு 14 இன் கீழ், 1,811 சங்கங்களின் FCRA பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என்று அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
"நம் நாட்டில் தீவிரவாத செயல்பாடுகளை பரப்புவதற்கு, வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவது தொடர்பான ஏதேனும் ஆதாரங்கள் பெறப்பட்டால், எப்ஆர்சிஏ மற்றும் தற்போதையபிற சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Input From: Hindu