ஜார்கண்ட்: முஸ்லீம்களால் கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு ஆதரவாக இந்துக்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம்!

Update: 2022-02-11 10:23 GMT

சரஸ்வதி பூஜை ஊர்வலத்தின்போது முஸ்லீம்களால் ரூபேஷ் பாண்டே என்ற சிறுவன் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட் மாநிலத்தில் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் உள்ள நை தாந்த் என்ற கிராமத்தில் சரஸ்வதி பூஜை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது துல்மஹா இமாம்படாவில் ஏற்பட்ட வன்முறையில் 17 வயதான ரூபேஷ் பாண்டேவை முஸ்லீம் கும்பல் அடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 27 முஸ்லீம்கள் மற்றும் 100 பேர் அடையாளம் தெரியாதவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ஆதரவாக பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும், சிறுவனுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி ஜமுவாவில் போராட்டம் நடத்தப்பட்டது. ரூபேஷ் பாண்டே படுகொலைக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இவர்களின் மெழுகுவர்த்தி ஊர்வலம் ஜமுவா சவுக்கிலிருந்து ராஜ்தன்வார் சாலை மற்றும் தியோகர் சாலை வழியாக சென்று மெயின் சவுக்கை அடைந்தனர். அப்போது நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கானோர்கள் கலந்து கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதே போன்று மாநிலத்தில் பல நகரங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Opindia

Similar News