14 மாநிலங்களுக்கு 7,183 கோடி விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

மொத்தமாக 14 மாநிலங்களுக்கு 7,183 கோடி விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Update: 2022-11-09 06:18 GMT

அரசியல் சட்டத்தின் 275 ஆவது சட்டப்பிரிவு மாநிலங்களுக்கு பகிர்வு வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. 15வது நிதி குழு சிபாரிசு செய்தபடி இந்த மானியம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் எந்தெந்த மாநிலங்களுக்கு மாநிலம் அளிக்கப்பட வேண்டும் என்பதை 15 வது நிதி குழு தீர்மானிக்கிறது.


நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் அளிக்க 15வது நிதி குழு சிபாரிசு செய்தது. இதன் பெயரில் ஆந்திரா, மணிப்பூர்,மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 14 மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் எட்டாவது தவணையாக இந்த மாதம் மேற்கண்ட 14 மாநிலங்களுக்கு 7,183 கோடியை 42 லட்சம் வருவாய் பற்றாக்குறை மானியமாக அளிக்கப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறை இத்தகையை விடுவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamani News

Tags:    

Similar News