இறக்குமதி வரியை குறைத்த மத்திய அரசு ! விலை வெகுவாக குறைய வாய்ப்பு ?

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் விலை வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

Update: 2021-10-14 03:33 GMT

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் விலை வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் எண்ணெய் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில் சமையல் எண்ணெய், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக எண்ணெய் விலை அதிகமாக இருந்ததால் சாமான்ய மக்கள் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில், விலைவாசியை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய காந்தி மற்றும் சோயா எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலமாக எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. பண்டிகை காலங்களில் மக்களிடையே கடைகாரர்கள் அதிகமான விலைக்கு விற்பது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Everyday Health


Tags:    

Similar News