5 லட்சம் டோஸ் 'ரெம்டெசிவிர்' மருந்தை இலவசமாக தமிழகத்துக்கு வழங்கிய மத்திய அரசு.!
5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்தை இலவசமாக மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்தை இலவசமாக மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தி வந்தனர். தமிழகத்தில் தொற்று அதிகரிப்பால் மருந்துக்கான தேவை அதிகரித்தது. இதனால் மருந்துகளை கள்ளச்சந்தையில் அதிகளவுக்கு விற்பனை செய்து வந்தனர். தனியார் மருத்துவமனைகளுக்கு சப்பை இல்லாததால் சென்னையில் அரசு மருந்து விற்பனை கழகம் மூலம் விற்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.
ஒரு ரெம்டெசிவிர் மருந்து ரூ.9,400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கள்ளச்சந்தையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பல மருத்துவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு தமிழகத்துக்கு 5 லட்சம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்தை இலவசமாக வழங்கியுள்ளது. இதன் விலை ரூ.80 கோடி இருக்கும். இப்போது யார் கேட்டாலும் மருந்து கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.