பிரதமர் தலைமையின் கீழ் இந்தியா தொலைநோக்கு பார்வை: முன்னேறி வருவது உண்மையா?
பொருட்கள் மறுசுழற்சி தொழில்துறையில் மத்திய அரசு உறுதியான அக்கறை கொண்டுள்ளது.
இன்றைய உலகில் ஊக்குவிக்கப்பட வேண்டிய மற்றும் முன்னேற்றப்பட வேண்டிய துறையான பொருட்கள் மறுசுழற்சித் தொழில் துறை தொடர்பாக மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். கொச்சியில் இந்திய, பொருட்கள் மறுசுழற்சி சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொருட்கள் மறுசுழற்சி தொடர்பான 10-வது மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில் அவர் பேசினார். மறுசுழற்சித் தொழில்துறை இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் பங்களிக்கிறது என்றும் இது வரும் ஆண்டுகளில் 35,000 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அமிர்தகாலத்துக்கான இந்தியாவின் பயணம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா, சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் மறுசுழற்சித் துறையில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் கூறினார். 22 சதவீதம் எஃகு மறுசுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறிய அவர், ஆனால் இந்த துறையின் வளர்ச்சிக்கு முறைசாரா துறையையும் இதில் இணைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். எஃகுத் தொழில் துறை மறுசுழற்சித் துறையின் துணைப் பிரிவு என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறுவதாக அவர் குறிப்பிட்டார். கோவிட் தொற்றைக் கையாண்ட விதம், சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி உட்பட ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தியா பலவற்றில் முதன்மையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில், மறுசுழற்சி உட்பட சுழற்சிப் பொருளாதாரத் துறையில் மற்றொரு முதன்மை இடத்தை இலக்காகக் கொண்டு இந்தியா செயல்படுவதாக அவர் கூறினார்.
Input & Image courtesy: News