தடுப்பூசி மையங்களை அதிகபடுத்துங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

100 சதவீத தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-04-26 14:02 GMT

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூடுதலானா தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.




 


நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதில் முதலாவது ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவது பணிகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை குறைப்பதற்கு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 100 சதவீத தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கான போக்குவரத்தில் எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.




 


ரெம்டெசிவிர் போன்ற கொரோனா சிகிச்சை மருந்துகள் இருப்பு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகளையும் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News