வேஸ்ட்டே வேண்டாம்! எஞ்சிய கரும்புகளும் எத்தனால் உற்பத்திக்கு எடுத்துக்கிறோம் - மத்திய அரசு அசத்தல்!
இந்தியாவில் சர்க்கரை நுகர்வு 260 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். சர்க்கரை ஆலைகள் அதிகப்படியாக 320 முதல் 360 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு உற்பத்தி செய்து இருப்பு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் கூறினார்.
இந்த அதிகப்படியான சர்க்கரை இருப்பு, சர்க்கரை ஆலைகளின் நிதிச்சூழலை பாதித்ததாகக் கூறினார். இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் எஞ்சியுள்ள கரும்புகளை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புமாறு மத்திய அரசு ஊக்குவித்தது.
2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 2018-19-ம் ஆண்டில் 3.37 லட்சம் மெட்ரிக்டன், 2019-20-ம் ஆண்டில் 9.26 லட்சம் மெட்ரிக் டன், 2020-21-ம் ஆண்டில் 22 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் 2021-22-ம் ஆண்டில் 36 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு அனுப்பப்பட்டது.
நடப்பு சர்க்கரை பருவத்தில் எஞ்சியுள்ள சுமார் 45 முதல் 50 லட்சம் மெட்ரிக்டன் அளவிலான சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு அனுப்புவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்குள் எஞ்சியுள்ள 60 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Input From: LiveMint