எல்லைப் பகுதிகளில் சீனா மறுபடியும் அடாவடி.. எதையும் சந்திக்க தயாராகும் இந்தியா.!

எல்லைப் பகுதிகளில் சீனா மறுபடியும் அடாவடி.. எதையும் சந்திக்க தயாராகும் இந்தியா.!

Update: 2020-12-16 08:34 GMT

எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே தாங்களும் விரும்புவதாக கூறும் சீனா இந்திய எல்லைப் பகுதியில் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்திய ராணுவத்தை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. 

இந்திய தரப்பில் 20 வீரர்கள் இறந்த சம்பவத்துக்குப் பின் சென்ற ஜூன் மாதத்துக்கு பின் இந்தியாவும் வலுவான பதிலடி கொடுத்துள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தைக் கொண்டே எல்லையில் மிகப் பெரிய புதிய இராணுவ அடிப்படை கட்டமைப்புகளை மேலும் இந்தியா உருவாக்கியது,  உருவாக்கி வருகிறது. ஏராளமான நவீன ஆயுதங்களை தயாரித்துக் கொண்டும், இறக்குமதி செய்துள்ளது. எல்லைப் பிரச்சினையில் சீனாவின் அட்டகாசங்களை உலக நாடுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றது இந்தியா. 

அனைத்து வல்லரசு நாடுகளும் இந்தியாவின் பின்னால் ஆதரவாக வந்தன. அதே சமயம் இந்தியா சீனாவின் முக்கிய பொருள்களுக்கும் வர்த்தகத்துக்கு தடை விதித்தது. இதனால் ஏற்பட்ட ஒரே பலன் இந்தியா ஆட்சேபம் தெரிவித்த பதற்றம் நிலவும் 4 இடங்களில் இருந்தும் சீனா தனது படைகளை பின்னோக்கி திருப்பியதுதான். 

ஆனாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்து அது முகாமை முழுமையாக காலி செய்யவில்லை என்றும் சாக்கு போக்கு கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றங்கள் உருவாகி அது இப்போது ஓரளவு தணிந்துள்ள நிலையில் சீனா இப்போது மீண்டும் வாலாட்ட தொடங்கியுள்ளது.  

சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது இந்திய பகுதிகளில் அத்துமீறிய இடங்களை உள்ளடக்கி புதிய உண்மை கட்டுப்பாட்டு எல்லையை ஏற்படுத்தி, இதை ஒப்புக் கொண்டால் தான் முழு அமைதி என்று சீனா கூறியதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் 4 இடங்களில் இருந்து படைகளை முழுவதுமாக வாபஸ் பெற்று, 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலைமையை கொண்டு வரவேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு ஆகும். 

இதை சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டது போல தலையாட்டிவிட்டு இப்போது மீண்டும் சீனா டைவர்ஸ் அடிப்பதற்கு காரணம் இந்தியாவின் கோபம் இப்போது தணிந்து விட்டது என அது கருதுவதாக கூறுகின்றனர். 

ஆனால் எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்காது. எத்தனை வலிமையான, எத்தனை கடுமையான நடவடிக்கையையும் எடுக்க தயங்காது. நமது நாட்டு எல்லையில் ஒரு சதுர அடியைக் கூட யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் ராஜ்நாத் கூறியுள்ளார். 

எனவே இதற்கு முன்பிருந்த அரசுகள் போல தற்போதுள்ள அரசு மென்மையாக நடந்து கொள்ளும் அரசு இல்லை என்றும், எனவே பொறுத்துப் போவதை சீனா பலகீனமாக எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து வாலாட்டினால் அந்த வால் ஓட்ட நறுக்கப்பட்டுவிடும் எனவும் இந்திய தரப்பில் கூறப்பட்டு வருவது குறிபிடத்தக்கது. 

Similar News