இலங்கையில் இருந்து சீனா புறப்பட்ட உளவு கப்பல் - பின்னணி என்ன?

இலங்கையில் இருந்து சீனாவின் உளவு கப்பல் சீனாவுக்கு நேற்று புறப்பட்டது.

Update: 2022-08-23 03:17 GMT

இலங்கையில் இருந்து சீனாவின் உளவு கப்பல் சீனாவுக்கு நேற்று புறப்பட்டது.

சீனாவின் 'யுவான் வாங் 5' உளவு கப்பல் ஆகஸ்ட் 11 17 வரை இலங்கையின் அம்மன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. செயற்கைக்கோள்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கப்பல் நம் ராணுவ தளங்கள் மற்றும் கட்டமைப்பு தகவல்களை சேகரிக்கும் அபாயம் இருந்ததால் இதை அம்மன் தொட்டா பகுதியில் நிறுத்தி வைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்தது, சீன அரசு கொடுத்த அழுத்தத்தின் பெயரால் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 22ஆம் தேதி துறைமுகத்தில் நிறுத்த இலங்கை வரைக்கும் ஒப்புக்கொண்டது.

கடந்த 16 ம் தேதி அம்மன் தொட்டா துறைமுகம் வந்த கப்பல் இலங்கை நேர படி நேற்று மாலை 4 மணிக்கு சீனா புறப்பட்டு சென்றது. இலங்கையில் இருந்த புறப்பட்ட உலக கப்பல் சீனாவின் ஜியான் துறைமுகம் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Source - Dinamalar

Similar News