பூடான் எல்லையில் இந்திய எல்லையை ஊடுருவி சென்று சீனர்கள் புதிய கிராமம் அமைப்பு: இந்தியா விசாரணை.!
பூடான் எல்லையில் இந்திய எல்லையை ஊடுருவி சென்று சீனர்கள் புதிய கிராமம் அமைப்பு: இந்தியா விசாரணை.!
சீனா சமீபத்தில் நேபாள எல்லைக்கருகே உள்ள பகுதிகளை சிறிது சிறிதாக அபகரித்து அங்கு தனது எல்லைப் பாதுகாப்பு காவல் நிலையங்களை நிறுவியுள்ளதாகவும், அதேபோல திபெத் எல்லையில் நேபாளத்துக்கு சொந்தமான ஒரு கிராமத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி அந்த கிராமத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் நேபாள எதிர் கட்சிகளே குறை கூறி இருந்தன.
இதற்கு காரணம் நேபாளத்தை ஆளும் பிரதமர் ஒலி ஷர்மா மற்றும் ஆளும் கம்யூனிஸ்டுகள் சீனக் கம்யூனிஸ்டுகளின் பிடியில் இருப்பதாகவும், அவர்கள் சீனாவின் பொம்மை அரசாக இருப்பதால் அவர்கள் சீனாவின் அட்டகாசங்களை பொறுத்துக் கொண்டு செல்வதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடான பூடானிடமும் சீனா தனது சட்டான் பிள்ளை குணத்தை காட்ட தொடங்கியுள்ளது. ஏற்கனவே பூட்டானில் உள்ள பிரபல உயிரியல் பூங்க்கா ஒன்றுக்கு உரிமை கொண்டாடிய சீனா ஐ.நா.சபையில் அந்த பூங்கா தொடர்பாக வளர்ச்சி நிதி எதையும் கொடுத்து பூடானுக்கு உதவக் கூடாது எனக் கூறியது.
மேலும் இது எங்கள் பாரம்பரிய இடம் என்று கூறி தகராறு செய்தது. ஆனால் இந்தியா அந்த விவகாரத்தில் பூடானுக்கு ஆதரவாக நின்று பூங்காவுக்கான சர்வதேச சபை உதவி நிதியை பெற்று தந்தது. இது சீனாவுக்கு இந்தியா மீதும், பூடான் மீதும் ஒரே சமயத்தில் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பூடான் மீது ஏற்கனவே கோபமாக இருந்த சீனா இப்போது சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதி வழியாக பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய டோக்லாமிலிருந்து இந்திய எல்லைக்குள் சிறிது தூரம் ஊடுருவி அதன் பின் பூட்டான் எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு சீனர்களை குடியேற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.