ஜேஎன்யூ பல்கலையில் ராம நவமியை கொண்டாடிய மாணவர்கள் மீது தாக்குதல்!

Update: 2022-04-11 03:40 GMT

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமநவமியை முன்னிட்டு ஏபிவிபி அமைப்பு மாணர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மற்றும் இடதுசாரி குழுக்களுக்கு இடையில் திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதனால் ராமநவமி கொண்டாடிய மாணவர்கள் மீது கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட மாணவர்கள் பொறுக்க முடியாமல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பல்கலைக்கழ மாணவர் மற்றும் முன்னாள் தலைவர் கூறும்போது, அசைவ உணவு சாப்பிடுவதில் இரண்டு குழுக்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதற்கு ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அசைவத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பினர். ராம நவமி கொண்டாடும் நாளில் ஏன் அசைவம் சமைக்கக்கூடாது என்று கூறிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News