23 கோடி மக்கள் நலன்தான் முக்கியம்: தாயாரை சந்தித்த பின்னர் முதல்வர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சி!

Update: 2022-05-04 10:41 GMT

தனது தந்தை இறப்பதற்கு முன்பாகவே அவரை பார்க்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டிருந்தது. ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 23 கோடி மக்கள் நலன்தான் மிகவும் முக்கியமாகும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது தாயார் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக புவுரி மாவட்டத்தில் உள்ள தனது குக்கிராமத்திற்கு நேற்று (மே 3) சென்றிருந்தார். அப்போது அவரது தாயின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். இந்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யநாத் பதிவிட்டிருந்தார். மேலும், கடந்த 2020ம் ஆண்டு ஹரித்வாரில் நடைபெற்ற அவரது தந்தை ஆனந்த் பிஸ்த்தின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ளவில்லை. ஏன் என்றால் அப்போது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறும்போது, இறுதி சமயத்தில் எனது தந்தையை காண வேண்டும் என்று மிக நீண்டகால ஆசையாக இருந்தது. இருந்தபோதிலும் தொற்று காரணமாக மாநிலத்தில் உள்ள 23 கோடி மக்களுக்கான கடமை உணர்வு காரணமாக தனது தந்தையை காண முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News